தமிழர் பண்பாடு
பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு எது?
நாகரிகம்
தமிழ் எத்தகைய மொழி?
தமிழ்மொழி மிகப் பழைமையான மொழி
உலகின் செம்மொழிகளுள் தமிழும் ஒன்றாகும்
கவிஞர் எவற்றை எழுதுவார்?
இலக்கியத்தில் செழித்த மொழி எதுவெனக் கவிஞர் கூறுகிறார்?
கவிதை
தமிழ்
மாறனின் அம்மம்மாவும் அம்மப்பாவும் எங்கே வாழ்கின்றார்கள்?
தாயகத்தில்
1) ஆழிக்குமரன் ஆனந்தனின் பிறந்த ஊர் எது?
2) இந்தியாவையும் ஈழத்தையும் பிரிக்கும் நீரிணை எது?
1) வல்வெட்டித்துறை
2) பாக்கு நீரிணை
குற்றெழுத்துகள் (குறில்) மற்றும் நெட்டெழுத்துக்கள் (நெடில்) எத்தனை?
குற்றெழுத்துகள் (குறில்) - 5
குறுகிய ஓசையுடையவை.
அ, இ, உ, எ, ஒ
நெட்டெழுத்துக்கள் (நெடில்) -7
நீண்ட ஓசையுடையவை
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
திணை எவை? பால் எவை?
திணை = உயர்திணை மற்றும் அஃறிணை
பால் = உயர்திணை:ஆண்பால், பெண்பால், பலர்பால்
அஃறிணை:ஒன்றன்பால், பலவின்பால்
எண் எவை? இடம் எவை?
எண் = ஒருமை, பன்மை
இடம் = தன்மை, முன்னிலை, படர்க்கை
சொல்லிய உறுப்புகள் எவை?
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை
பனைமரத்தின் 3 பயன்களை கூறுக
பன்னாடை, நுங்கு, கொக்காரை, பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர், பனையோலை
தமிழரின் தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்கள் எவை?
மானம், வீரம், கொடை
இலக்கியம் என்றால் என்ன?
மக்களுக்கு அறிவும் இன்பமும் தரும் இந்த நூல்களை நாம் இலக்கியம் என்கிறோம்
"தமிழன் கனவு" கவிதை யாரால் எழுதப்பட்டது?
காசி ஆனந்தன்
நாம் எமது உறவினர்களை எவ்வாறு அழைக்க வேண்டும்?
உறவினர்களை உறவுமுறை சொல்லித்தான் அழைக்க வேண்டும்
ஆனந்தன் எத்துறையில் பணியாற்றினார்?
இலங்கைப் பலகலைக்கழகத்தில் சட்டத்துறையிலும்
இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையிலும் பட்டம் பெற்று
வழக்கறிஞராகப் பணியாற்றியவர்
வல்லினம், மெல்லினம், இடையினம் எவை?
வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் - ங், ஞ், ண் ந், ம், ன்
இடையினம் - ய், ர், ல், ள், ழ், ள்
கட்டுரையானது எந்த பகுதிகளைக் கொண்டிருக்கும்?
முகவுரை உள்ளடக்கம், முடிவுரை
இலையின் 5 பருவங்கள் எவை என்று கூறுக
கொழுந்து: புதிதாகத் தோன்றிய நிலை
தளிர்: சற்று வளர்ந்த மென்மையான நிலை
இலை: நன்கு வளர்ச்சியுற்ற நிலை
பழுப்பு: பழுத்து விட்ட நிலை
சருகு: காய்ந்து விட்ட நிலை
பூவின் 5 பருவங்கள் எவை என்று கூறுக
அரும்பு → தோற்ற நிலை
போது → விரியத் தொடங்கும் நிலை
மலர் → மலர்ந்த நிலை
வீ → வீழும் நிலை
செம்மல் → வாடிய நிலை
1) பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
2) அவை எவை? எடுத்துக்காட்டு ஒவ்வொன்றுக்கும் தருக
1) 6
2) பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர்
பொருட்பெயர் = நூல், நாய், பட்டம்
இடப்பெயர் = தமிழ்ப்பள்ளி, நூலகம், கடற்கரை
காலப்பெயர் = மாலை, பனிகாலம், புதன்
சினைப்பெயர் = தலை, பூ, காய்
குணப்பெயர் = சதுரம், இனிப்பு, சிவப்பு
தொழிற்பெயர் = படித்தல், ஓடுதல், சிரித்தல்
புலம்பெயர் தமிழர் தமது பண்பாட்டை எதனூடாகப் பேணி வருகின்றனர்?
தாயகப் பிணைப்பின் ஊடாகப் பேணி வருகின்றனர்
முற்காலத்தில் இலக்கியங்கள் எப்படி இருந்தன?
முற்காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழிப் பாடல்களாகவே இருந்தன
கவிதை வாயிலாக எவற்றை வெளிப்படுத்தலாம்?
வீரம், காதல், கொடை, நட்பு, இன்பதுன்ப உணர்ச்சிகள் போன்றவர்ரை வெளிப்படுத்தலாம்
1) உறவுகள் எவ்வாறு வலுப்படும்?
2) தமிழரது பண்பாடுகளுள் ஒன்று கூறுக
1) தாய்மொழியில் பேசும்போது அவர்கள் உங்களுடன் தயக்கமின்றிப் பழகுவார்கள்
2) விருந்தோம்பல்
ஆழிக்குமரன் ஆனந்தன் என்ற பட்டம் எப்போது கிடைத்தது?
தலைமன்னாரிலிருந்து தனுக்கோடிக்குப் போய்த் திரும்பும் தூரத்தை ஐம்பத்தியொரு' (51) மணிநேரத்தில் கடந்து பெரும் திறவினையை நிலைநாட்டியதால்