PTS அ முதல் ஃ வரை
இந்தியா to
டல்லாஸ்
புதிருக்கு என்ன பதில்
கல் தோன்றி மண் தோன்றா...
தூய தமிழ்
புலம் பெயர்ந்த பூ
வாய் விட்டு சிரிங்க!
100

நம் பள்ளியில் மழலை நிலையில் ஆண்டின் முதல் நாளில், முதல் வகுப்பில் முதலில் சொல்லித்தரும் பாட்டு என்ன? பாட்டை முழுவதுமாக பாட வேண்டும்

எங்கள் வீடு வெள்ளை பசு

100

இந்திய உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளுக்கு (Indian Hub) டல்லாஸில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பகுதிகள் எவை?

ஃபிரிஸ்கோ (Frisco) மற்றும் பிளேனோ (Plano). இந்தப் பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிப்பதால், இந்தியாவின் அனைத்து மாநில உணவுகளும் இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன.

100

இடி இடிக்கும், மின்னல் மின்னும்,

மழை பெய்யாது

பட்டாசு

100

உலகின் மிகப்பழைய இலக்கண நூலாகக் கருதப்படும் 'தொல்காப்பியம்' எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? அவை யாவை?

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. அவை: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்.

100

WhatsApp

புலனம்

100

தமிழ் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் (இந்தியா தவிர்த்த) இரண்டு நாடுகள் எவை?

இலங்கை மற்றும் சிங்கப்பூர்

100

ஒரு வடையைச் சுடும்போது, அதற்கு ஏன் நடுவில் ஓட்டை போடுகிறார்கள்?

வடைக்கு மூச்சு முட்டக்கூடாது என்பதற்காக!

200

நம் பிளானோ தமிழ் பள்ளி எத்தனை மாணவர்களுக்கு ஓரு ஆசிரியர் என்ற விகித அடிப்படையில் இயங்குகிறது?

7:1

200

டெக்சாஸ் மாநிலம் அமெரிக்காவில் பரப்பளவில் 2-வது பெரிய மாநிலம். அதேபோல், இந்தியாவில் பரப்பளவில் (Area) 2-வது இடத்தில் உள்ள பெரிய மாநிலம் எது?

மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh).

200

வாய் இல்லை, ஆனால் பேச வைக்கிறேன்;

காது இல்லை, ஆனால் கேட்க வைக்கிறேன்.

நான் யார்?

தொலைபேசி

200

கீழடி அகழ்வாராய்ச்சி எந்த நதிக்கரையில் நடைபெற்று வருகிறது?

வைகை

200

Charger

மின்னுக்கி

200

உலகிலேயே முதன்முதலாக ஒரு மொழிக்காக மாநாடு (உலகத் தமிழ் மாநாடு) நடத்தப்பட்ட நாடு எது?

மலேசியா, 1966

200

ஒரு ஆப்பிள் மரத்துல இருந்து ஏன் கீழ விழுது?

மரத்துக்கு 'கேட்ச்' (Catch) பிடிக்கத் தெரியாது, அதான் கீழ விழுது!

300

PTS முதலில் திரு. வேலு & திருமதி விசாலாட்சி அவர்களின் இல்லத்தில் நடந்தது. இரண்டாவதாக எந்த இடத்தில்/ பள்ளியில் நடந்தது?

Carpenter Rec Center, Plano

300

டெக்சாஸில் ஓடும் ஒரு நதியின் பெயரும், தமிழகத்தில் ஓடும் ஒரு நதியின் பெயரும் 'T' என்ற எழுத்தில் தொடங்கும். அவை யாவை?

Trinity River & தாமிரபரணி / தென்பெண்ணை ஆறு

300

எழும்போதே விழுவான், விழும்போதே எழுவான், ஆனால் ஒருபோதும் காயப்பட மாட்டான். அவன் யார்?

பந்து (Ball)

300

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகி; மணிமேகலையின் தலைவி மணிமேகலை. இவள் கண்ணகியின் கணவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கதைத் தொடர்பாலும் காலத்தாலும் இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளதால் 'இரட்டைக் காப்பியங்கள்' எனப்படுகின்றன.

300

Penguin

பனிப்பாடி

300

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள ஒரு கோவிலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உள்ளது. அது எந்த கோயில்?

'அங்கோர் வாட்' (Angkor Wat). இக்கோவில் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இதன் கட்டிடக்கலை மற்றும் கலைநயத்தில் சோழர் காலக் கட்டிடக்கலையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மேலும், அங்குள்ள பல கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்களின் சாயலைக் காணலாம்.

300

25 வருஷமா ஒரு தமிழ் பள்ளி நடக்குதுன்னா, அங்க இருக்குற பென்சிலுக்கு என்ன வயசு இருக்கும்?

ஏன்னா எல்லாரும் பூரியை மட்டும் தான் 'உப்பி' (குண்டா) இருக்கேன்னு கிண்டல் பண்றாங்க!

400

நம் PTS இணையதளத்தில் உள்ளபடி, பள்ளியின் இலக்கு (vision) என்ன?

1. தரமான தமிழ் மொழிக் கல்வி

2.மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பேசும்  மக்களுக்கான தளம்.

3. தமிழ் மொழி & பண்பாட்டின் பாதுகாப்பு (Protect), மேம்பாடு (Promote), நிலைநிறுத்தம் (Preserve) 

From Website: "Quality education in Tamil language and to be a Platform for Students, Teachers and the Tamil Speaking community to Protect, Promote and Preserve the richness of Tamil language and culture."


400

டல்லாஸில் உள்ள எந்தச் சிலை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாகக் கருதப்படுகிறது?

மகாத்மா காந்தி சிலை (Mahatma Gandhi Memorial). இது இர்விங் (Irving) பகுதியில் உள்ள லாஸ் கொலினாஸில் (Las Colinas) அமைந்துள்ளது.

400

ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் அணுவளவும் சத்தம் இருக்காது. அது என்ன?

எறும்பு ஊர்வலம்

400

'பரிபாடல்' நூலின் தனிச்சிறப்பு என்ன?

இது இசையோடு பாடப்படும் 'பண்' அமைந்த நூல். சங்க நூல்களில் இசையோடு நமக்குக் கிடைத்துள்ள ஒரே நூல் இதுவே.

400

Marker

எடுப்பாக்கி

400

கனடா நாட்டில் எந்த மாதம் "தமிழ் மரபு மாதம்" (Tamil Heritage Month) ஆகக் கொண்டாடப்படுகிறது?

ஜனவரி

400

சூரியன் (Sun) ஏன் ராத்திரி நேரத்துல வர்றது இல்ல?

அதுக்கு இருட்டைப் பார்த்தா பயம்!

500

25-வது ஆண்டைக் கொண்டாடும் உங்கள் பள்ளியில், 'இருபத்தி ஐந்து' என்ற எண்ணைத் தமிழ் எண்களில் (Tamil Numerals) எழுதிக் காட்ட முடியுமா?

உரு (உ=2, ரு=5).

500

டல்லாஸ் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு 2001. அதே ஆண்டில் மேற்கு இந்தியாவில் நடந்த முக்கிய சம்பவம் என்ன?

Gurajat (bhuj) பூகம்பம்

500

பிறக்கும்போது வெள்ளை ஆடை, வளரும்போது பச்சை ஆடை, முதுமையில் சிவப்பு ஆடை. அது என்ன?

மிளகாய் (பூ வெள்ளையாகவும், காய் பச்சையாகவும், பழுத்தால் சிவப்பாகவும் இருக்கும்).

500

'தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்? அவர் செய்த புரட்சி என்ன?

மறைமலை அடிகள். இவர் தமிழில் கலந்துள்ள பிற மொழிச் சொற்களை (குறிப்பாக வடமொழி) நீக்கி, தூய தமிழில் பேசவும் எழுதவும் ஒரு இயக்கத்தையே உருவாக்கினார். தன் பெயரையே 'வேதாசலம்' என்பதிலிருந்து 'மறைமலை' என மாற்றிக்கொண்டார்.

500

Helicopter

உலங்கூர்தி

500

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், எந்த நதியின் கரையில் ஒவ்வோர் ஆண்டும் மிகப்பிரம்மாண்டமான 'தமிழ் தேர்த்திருவிழா' (Ratha Yatra) நடைபெறுகிறது?

சேன் (Seine) நதிக்கரை - பாரிஸ் விநாயகர் கோவில் திருவிழா

500

Do you know what the longest English word in the world is?

Smiles. The distance between the first S and the last S is one mile. That's it.